தேசியம்
செய்திகள்

G7 தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்க ஜப்பான் சென்றடைந்த பிரதமர்

G7 நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் Justin Trudeau வியாழக்கிழமை (18) ஜப்பான் சென்றடைந்தார்.

சீனா, ரஷ்யாவுடனான புவிசார் அரசியல் பதட்டங்களுக்கு மத்தியில் இந்த பயணம் அமைந்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை (21) வரை ஜப்பானின் தங்கியிருக்க உள்ள பிரதமர் அங்கு நடைபெற உள்ள G7 நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.

இந்த உச்சிமாநாட்டில் புவிசார் அரசியல், உலகளாவிய பாதுகாப்பு பிரச்சினைகள், பொருளாதார பின்னடைவு உள்ளிட்ட ஏழு முக்கிய விடயங்களில் கவனம் செலுத்தப்படும்.

ஜப்பான் சென்றடைவதற்கு முன்னதாக, Justin Trudeau தனது முதல் அதிகாரப்பூர்வ தென் கொரியா பயணத்தை வியாழக்கிழமை நிறைவு செய்திருந்தார்.

Related posts

நாடாளுமன்ற அமர்வுகள் முன்கூட்டியே ஒத்திவைப்பு!

Lankathas Pathmanathan

ஈரானிய ஆட்சியின் உயர்மட்ட அதிகாரிகள் கனடாவுக்குள் நுழைய தடை

Lankathas Pathmanathan

சராசரி வாடகை இரண்டாயிரம் டொலர்களை தாண்டியது!

Lankathas Pathmanathan

Leave a Comment