வெள்ளிக்கிழமை மாலை வங்கி கொள்ளையை தடுக்க முயன்ற இரண்டு Toronto காவல்துறை அதிகாரிகள் காயமடைந்தனர்.
Mimico பகுதியில் (Lake Shore Boulevard West and Allen Avenue) உள்ள TD வங்கியில் இந்த கொள்ளைச் சம்பவம் வெள்ளிக்கிழமை மாலை 7:15 அளவில் நிகழ்ந்தது. காயமடைந்த இரண்டு காவல்துறை அதிகாரிகளும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வங்கியை கத்தி முனையில் கொள்ளையடிக்க முயன்றவர்களை தடுத்த காவல்துறையினர் காயமடைந்ததாக காவல்துறை பேச்சாளார் தெரிவித்தார். இந்த கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.