COVID தொற்றின் மூன்றாவது அலையை Ontario எதிர்கொள்வதை மாகாணத்தின் உயர் மருத்துவர் நேற்று வியாழக்கிழமை உறுதிப்படுத்தியுள்ளார்.
ஆனாலும் இந்த அலையின் தாக்கம் எவ்வளவு பெரியதாக இருக்கும் என்பது தெளிவாக தெரியவில்லை என வைத்தியர் David Williams கூறினார். Ontarioவின் பல பகுதிகளிலும் தொற்றின் புதிய தரவுகள் அதிவேக வளர்ச்சி கண்டு வருவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இந்தக் கருத்தை அவர் வெளியிட்டுள்ளார்.
தொடர்ந்தும் இரண்டாவது நாளாக Ontarioவில் 1,500க்கும் மேற்பட்ட புதிய தொற்றுக்க ள் நேற்று வியாழக்கிழமை பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே Ontario தொற்றின் மூன்றாவது அலையை எதிர்கொள்வதாக மாகாணத்தின் அறிவியல் ஆலோசகர்களும், மாகாணத்தின் மருத்துவமனை சங்கமும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது