Toronto பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கு ஒரு கோடி இந்திய ரூபாய்கள் நிதி தமிழக அரசால் வழங்கப்படுகின்றது.
இதற்கான ஆணை தமிழக அரசின் சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிதி உதவி கனடிய டொலரில் அண்ணளவாக 1 இலட்சத்து 75 ஆயிரம் டொலர்களாகும்.
இந்த நிதி உதவிக்காக தமிழக அரசாங்கத்திற்கு கனடியத் தமிழர் பேரவை நன்றி தெரிவித்து இன்று ஒரு அறிக்கையை வெளியிட்டது.