கனடா இந்த வாரம் 6 இலட்சத்தி 40 ஆயிரத்திற்கும் அதிகமான COVID தடுப்பூசிகளை பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Health கனடாவினால் அங்கீகரிக்கப்பட்ட Pfizer, Moderna ஆகிய நிறுவனங்களிடமிருந்து இந்தத் தடுப்பூசிகளை கனடா இந்த வாரம் பெறவுள்ளது. இது கனடா ஒரு வாரத்தில் பெறும் அதிக எண்ணிக்கையிலான தடுப்பூசிகளாக அமையவுள்ளது.
தொடர்ந்து அடுத்த வாரங்களில் கனடா வாராந்தம் 4 இலட்சத்தி 45 ஆயிரம் தடுப்பூசிகளை இந்த இரண்டு நிறுவனங்களிடமிருந்து பெறவுள்ளன. கடந்த வாரம் Pfizer 4 இலட்சம் தடுப்பூசிகளை கனடா Pfizer நிறுவனத்திடமிருந்து பெற்றுக்கொண்டது இங்கு குறிப்பிடத்தக்கது.