வீட்டில் தங்கியிருக்கும் உத்தரவு Ontarioவின் மூன்று இடங்களில் நீடிக்கப்படுகின்றது.
COVID தொற்றின் பரவல் அதிகமாக உள்ள Toronto, Peel பிராந்தியம், North Bay-Parry Sound ஆகிய இடங்களில் இந்த கட்டுப்பாடுகள் நீடிக்கப்படுகின்றன. March மாதம் 8ஆம் திகதிவரை இந்த நீட்டிப்பு அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் York பிராந்தியத்தில் உள்ள கட்டுப்பாடுகள் அடுத்த வாரம் விலத்தப்படுகின்றது. இன்று Ontario மாகாண அரசாங்கம் இந்த அறிவித்தலை வெளியிட்டது.
தற்போது வீட்டில் தங்கியிருக்கும் உத்தரவு அமுலில் உள்ள நான்கு இடங்களில் உள்ள முக்கிய பொது சுகாதார போக்குகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக இன்று அரசாங்கம் அறிவித்தது.