COVID தடுப்பூசி விநியோக சிக்கல்களின் தாக்கங்களை கனடா தொடர்ந்து உணரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவின் பொது சுகாதார நிறுவனத்தின் செயல்பாடுகளின் துணைத் தலைவர் Maj.-Gen. Dany Fortin இன்று (வியாழன்) இந்தக் கருத்தை தெரிவித்தார். அடுத்த வாரம் கனடா சுமார் 70,000 Pfize தடுப்பூசிகளை பெறும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறினார்.
இந்த மாதத்தின் நான்காவது வாரத்தில் நிர்ணயிக்கப்பட்ட Moderna தடுப்பூசி விநியோகத்தின் எண்ணிக்கை எதிர்பார்க்கப்பட்டதை விட குறைவாகவே இருக்கும் எனவும் Fortin தெரிவித்தார். கடந்த சில வாரங்களாக கனடாவில் வழங்கப்படும் தடுப்பூசிகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது
இந்த வாரம், கனடா 79,000 Pfizer தடுப்பூசிகளை மாகாணங்களுக்கு விநியோகித்துள்ளது. கனடாவின் தனிமைப்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு எதிர்வரும் நாட்களில் விநியோகிக்க 180,000 தடுப்பூசிகளை Moderna அனுப்பியுள்ளது.