தேசியம்
VIDEO - கனடிய செய்திகள் செய்திகள்

ஸ்ரீலங்காவின் சுதந்திர தினம்: Torontoவில் கவனயீர்ப்பு ஊர்திப் பவனி

ஸ்ரீலங்காவின் சுதந்திர தினம் ஈழத் தமிழர்களுக்கு துக்க தினம் என்ற தொணியில் இன்று (வியாழன்) Torontoவில் கவனயீர்ப்பு ஊர்திப் பவனி ஒன்று நடைபெற்றது.

Toronto பெருபாகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பயணித்த வாகனங்கள் Torontoவில் அமைந்துள்ள இலங்கை துணைத் தூதரகத்தை சென்றடையும் வகையில் இந்த ஊர்திப் பவனி நடைபெற்றது. இந்த ஊர்திப் பவனியில் கலந்து கொண்ட வாகனங்களில் கறுப்பு கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்தன.

இலங்கை துணைத் தூதரகத்தை சென்றடைந்த வாகனத்தில் பயணித்தவர்களின் குறிப்பிட்ட சிலர் துணைத் தூதரக வாசலில் கருப்பு கொடியைக் கட்டி தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இலங்கையை தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் இன அழிப்பில் பாதிக்கப்பட்ட மக்களை நினைவு கூர்ந்தும், தாயகத்தில் மக்களால் முன்னெடுக்கப்படும் பொத்துவில் முதல் பொலிகண்டிவரை கவனவீர்ப்புப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாகவும், அந்த அடையாள கவனவீர்ப்புப் போராட்டத்தை ஆதரித்தும், இன்றைய கவனயீர்ப்பு ஊர்திப் பவனி நடைபெற்றதாக நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் தேசியத்திடம் தெரிவித்தனர்.

Related posts

Booster தடுப்பூசியை பெற்றுக் கொண்ட பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan

பணவீக்கத்தை எதிர்கொள்வதற்கு அரசாங்கத்தின் திட்டம்: நிதி அமைச்சர் Chrystia Freeland

Alberta பயணமான பிரதமர் Justin Trudeau !

Gaya Raja

Leave a Comment

error: Alert: Content is protected !!