Markham நகரின் 7ஆம் வட்டாரத்திலும் தமிழின நினைவுத்தூபி தூபி ஒன்று அமைக்கத் திட்டம் ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் குறித்து Markham நகரின் 7ஆம் வட்டார நகரசபை உறுப்பினர் Khalid Usman அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளார். இலங்கைத்தீவில் தமிழர்களின் அவல நிலை நிலையை குறிக்கும் வகையில் இந்த நினைவுத் தூபி அமையும் என Khalid Usman வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறினார். இந்த நினைவுத் தூபியை தான் பிரதிநிதித்துவப்படுத்தும் 7ஆம் வட்டாரத்தில் அமைக்க விரும்புவதாக அவர் தெரிவித்தார்.
இந்த விடயம் குறித்து விரைவில் Markham நகரசபை கூட்டத்தில் முன்மொழிவு ஒன்றை முன்வைக்கவுள்ளதாகவும் அவர் கூறினார். இந்த தமிழின நினைவுத்தூபி அமைக்கத் திட்டம் குறித்த பொதுமக்கள் கலைத்துறையாடல் ஒன்று எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மெய்நிகர் நிகழ்வாக நடைபெறவுள்ளது.
ஏற்கனவே Brampton நகர சபையில் தமிழின நினைவுத்தூபி அமைக்கும் திட்டத்துக்கு நகரசபை அனுமதி வழங்கியுள்ளமை குறிபிடத்தக்கது.