கனடிய நாடாளுமன்றம் நோக்கிய ஒரு வாகனப் பேரணி தமிழர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எதிர்வரும் புதன்கிழமை இந்த வாகனப் பேரணி நடைபெறவுள்ளது.
இலங்கை அரசை சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்துமாறு கனடிய அரசிடம் கோரும் வகையில் இந்த வாகனப் பேரணி முன்னெடுக்கப்படுகின்றது. Torontoவில் இருந்தும், Montrealலில் இருந்தும் காலை ஆரம்பமாகவுள்ள இந்த வாகனப் பேரணி மாலை Ottawaவை சென்றடைய ஏற்பாடாகியுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் இணைத் தலைமை நாடுகளில் ஒன்றாக கனடா இருப்பதனால் தமிழ் மக்கள் சார்ந்து முடிவுகளை எடுப்பதற்கான தார்மீகக் கடமை கனடாவிற்கு உள்ளதாக இந்த வாகனப் பேரணியின் ஏற்பாட்டாளர்கள் தெர்வித்துள்ளனர்.