December 12, 2024
தேசியம்
செய்திகள்

November மாதத்தில் மாத்திரம் கனடாவில் 140,000 தொற்றுக்கள் பதிவு!

November மாதத்தில் மாத்திரம் கனடாவில் 140,000 COVID தொற்றுக்கள் பதிவாகியுள்ளன.

கடந்த வெள்ளிக்கிழமை (27) முதல் ஒவ்வொரு நாளும் 6,000 புதிய தொற்றுக்கள் கனடாவில் பதிவானதாக புதிய தரவு சுட்டிக் காட்டுகின்றது. கடந்த May மாதத்தில் தொற்றின் அதிகமான பரவல் காலத்தை விட கனடா தற்போது மூன்று மடங்கு அதிகமான தொற்றுக்களை பதிவு செய்கின்றது.

பொது சுகாதார அதிகாரிகளினதும் அரசாங்கங்களினதும் புதிய கட்டுப்பாடுகளையும் தாண்டி November மாதம் தொற்றின் பரவலின் எண்ணிக்கை அதிகரித்தே சென்றுள்ளது. கடந்த 30 நாட்களில் சுமார் 140,000 பேர் தொற்றுள்ளவர்கள் என பதிவாகினர். இது October மாத புதிய தொற்றாளர்களின் எண்ணிக்கையை விட இரு மடங்கு அதிகமானதாகும். இந்த தொற்றின் ஆரம்பத்திலிருந்து September மாதம் நடுப்பகுதி வரை 140,000 தொற்றுக்கள் மாத்திரமே கனடாவில் பதிவாகின என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

November மாதத்தில் COVID காரணமாக 2,000 பேர் வரை மரணமடைந்தனர். இது கடந்த இலை துளிர் காலத்தில் பதிவான நாளாந்தம் 150 மரணங்கள் என்ற நிலையை எட்டாமல் விட்டாலும் November மாதத்தில் இறப்புகளும் தொற்றுக்களும் நாளாந்தம் அதிகரித்தே செல்கின்றன.

இதன் மூலம் கனடாவில் இன்று (01) காலை வரை மொத்தம் 378,139 தொற்றுக்களும் 12,130 மரணங்களும் சுகாதார அதிகாரிகளினால் பதியப்பட்டுள்ளன. மொத்த தொற்றாளர்களில் 299,972 பேர் சுகமடைந்துள்ளனர். மேலும் 2,545 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

Markham- Thornhill தொகுதி Conservative கட்சி வேட்பாளர் தேர்தலில் தமிழர்

Lankathas Pathmanathan

Conservative தலைவருக்கான போட்டியில் முன்னாள் Quebec முதல்வர்

Lankathas Pathmanathan

மாகாண, பிராந்திய நிதி அமைச்சர்கள் மத்திய நிதியமைச்சருடன் சந்திப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment