தேசியம்
செய்திகள்

அரசியலில் இருந்து விலக மேலும் இரண்டு Liberal அமைச்சர்கள் முடிவு!

அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என மேலும் இரண்டு Liberal அமைச்சர்கள் அறிவித்தனர்.

Justin Trudeau அமைச்சரவையில் பதவி வகித்த அமைச்சர்கள் Arif Virani, Mary Ng ஆகியோர் இந்த முடிவை திங்கட்கிழமை (10) அறிவித்தனர்.

மீண்டும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்ற முடிவை கடந்த 12 மாதங்களில் அறிவித்த பல உயர்மட்ட Liberal நாடாளுமன்ற உறுப்பினர்கள் பட்டியலில் நீதி அமைச்சர் Arif Virani, சர்வதேச வர்த்தக அமைச்சர் Mary Ng ஆகியோர் இணைந்துள்ளனர்.

2015 தேர்தலில் NDP கட்சியிடமிருந்து Parkdale-High Park தொகுதியை Arif Virani வெற்றி பெற்றார்.

அவர் அமைச்சரவைக்கு 2023 இல் நியமிக்கப்பட்டார்.

2018 ஆம் ஆண்டு முதல் அமைச்சரவையில் பணியாற்றிய Mary Ng, ஏன் மீண்டும் தேர்தலில் போட்டியிடவில்லை என்பதற்கான காரணத்தை தெரிவிக்கவில்லை.

2017 இடைத் தேர்தலில், தமிழரான ராகவன் பரஞ்சோதியை வெற்றி பெற்றதன் மூலம் முன்னாள் Liberal அமைச்சர் John McCallum பிரதிநிதித்துவப்படுத்திய Markham-Thornhill தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக Mary Ng தேர்ந்தெடுக்கப்பட்டார்.

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் Conservative கட்சி சார்பாக இந்தத் தொகுதியில் தமிழரான லியோனல் லோகநாதன் போட்டியிடவுள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Related posts

CTVக்கு எதிராக வழக்கில் தீர்வை எட்டிய Patrick Brown

4 ஆவது அலை கனடாவில் ஒரு யதார்த்தமாக மாற வேண்டிய அவசியமில்லை: தொற்று நிபுணர்கள் கருத்து

Gaya Raja

Manitoba விபத்தில் இறந்தவர்களுக்கு இறுதிச் சடங்குகள்

Lankathas Pathmanathan

Leave a Comment