தேசியம்
செய்திகள்

2024 Paris Olympics: நிறைவு நிகழ்வில் கனடிய தேசியக் கொடியை ஏந்திச் செல்லும் Summer McIntosh, Ethan Katzberg

2024 Paris Olympics போட்டியின் நிறைவு நிகழ்வில் கனடிய தேசியக் கொடியை ஏந்திச் செல்ல Summer McIntosh, Ethan Katzberg ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

Paris Olympics போட்டி ஞாயிற்றுக்கிழமை (11) நிறைவுக்கு வருகிறது.

இதில் கனடிய அணியை தேசியக் கொடியை ஏந்திய வண்ணம் Summer McIntosh, Ethan Katzberg ஆகியோர்  வழிநடத்த தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Summer McIntosh இம்முறை Olympic போட்டியில் மூன்று தங்கம் உட்பட நான்கு பதக்கங்களை வெற்றி பெற்றார்

Torontoவைச் சேர்ந்த 17 வயது நீச்சல் வீரரான அவர் மூன்று தங்கப் பதக்கம் வென்ற முதல் கனடியர் என்ற பெருமையை பெற்றுள்ளார்

Ethan Katzberg ஆண்களுக்கான hammer throw போட்டியில் கனடாவின் முதல் தங்கத்தை வென்றார்

நிறைவு நிகழ்வில் கனடிய தேசியக் கொடியை ஏந்திச் செல்லும் சந்தர்ப்பம் வாழ்நாளில் ஒரு முறை கிடைக்கும் ஒரு பெரும் மரியாதை என Summer McIntosh கூறினார்.

Olympic போட்டியின் இறுதி நாளன்று ஒன்பது தங்கம் உட்பட 27 பதக்கங்களுடன் கனடா உள்ளது.

இது புறக்கணிக்கப்படாத – non-boycotted – கோடைகால Olympic போட்டியில் கனடா பெற்ற அதிக பதக்கங்களாகும்.

Related posts

கனடிய மத்திய வங்கியின் வட்டி விகிதம் இந்த ஆண்டு 2.75 சதவீதத்தை எட்டும்

Lankathas Pathmanathan

Ontarioவில் 1998 ஆம் ஆண்டுக்குப் பின்னர் மிக மோசமான பனிப்புயல்

Lankathas Pathmanathan

17 மாதங்களின் பின்னர் கனடாவுக்குள் அனுமதிக்கப்படும் அமெரிக்கர்கள்!

Gaya Raja

Leave a Comment