தேசியம்
செய்திகள்

ஈரானில் உள்ள கனடியர்களை நாடு திரும்ப வலியுறுத்தல்

ஈரானில் உள்ள கனடியர்களை நாடு திரும்புமாறு கனடிய மத்திய அரசு வலியுறுத்துகிறது.

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர படையை – Iran’s Islamic Revolutionary Guard Corps (IRGC) கனடிய அரசாங்கம்  பயங்கரவாத குழுவாக பட்டியலிட்டது

கனடிய அரசின் இந்த முடிவை ஈரான் கண்டித்துள்ளது.

கனடிய அரசின் முடிவை  “விவேகமற்ற, வழக்கத்திற்கு மாறான அரசியல் உந்துதல் நடவடிக்கை” என ஈரானிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறினார்.

கனடாவின் இந்த நடவடிக்கை எந்த விளைவையும் ஏற்படுத்தாது என அவர் தெரிவித்துள்ளார்.

கனடிய அரசின் முடிவு, கனடாவில் உள்ள ஈரானிய சமூகத்தின் உறுப்பினர்களுக்கும், ஈரானில் உள்ள அவர்களது குடும்பத்தினருக்கும் உண்மையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அறிவதாக பிரதமர் Justin Trudeau வியாழக்கிழமை (20) தெரிவித்தார்.

இந்த நிலையில் ஈரான் அரசின் பழிவாங்கும் செயல்களைத் தவிர்க்க ஈரானில் உள்ள கனடியர்களை நாடு திரும்புமாறு கனடிய வெளிவிவகார அமைச்சர் Mélanie Joly வலியுறுத்தினார்.

ஈரானில் உள்ள கனடியர்களை நாடு திரும்புமாறும், ஈரான் செல்ல திட்டமிட்டுள்ள கனடியர்கள் அந்தத் திட்டத்தை கைவிடுமாறும் Mélanie Joly தெரிவித்தார்.

ஈரானுக்கான புதிய பயண ஆலோசனை எச்சரிக்கையை புதன்கிழமை (19) கனடா வெளியிட்டது.

வெளிநாடுகளில் உள்ள கனடியர்களின் பதிவு சேவையின்படி, 1,600 க்கும் மேற்பட்ட கனடியர்கள் ஈரானில் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த பதிவு தன்னார்வமாக இருப்பதால், இந்த எண்ணிக்கை அங்குள்ள கனடியர்களின் உண்மையான எண்ணிக்கையை குறைத்து மதிப்பிடக்கூடும் என கனடிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.

2012 இல் ஈரானுடனான இராஜதந்திர உறவுகளை கனடா துண்டித்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

வேலையற்றோர் விகிதம் கடந்த மாதம் 5.3 சதவீதமாக பதிவானது

முன்னாள் Toronto நகர முதல்வர் Mel Lastman காலமானார்!

Lankathas Pathmanathan

Vancouver தீவின் முன்னாள் வதிவிட பாடசாலையின் நிலப் பகுதியில் 17 அடையாளம் காணப்படாத கல்லறைகள்

Lankathas Pathmanathan

Leave a Comment