December 21, 2024
தேசியம்
செய்திகள்

Quebec மாகாணத்தில் மின்சாரத்தை இழந்த 100,000 வாடிக்கையாளர்கள்

Quebec மாகாணத்தில் தொடரும் கடும் பனி காரணமாக 100,000க்கும் அதிகமானோர் மின்சாரம் இல்லாத நிலை தொடர்கிறது.

Mauricie, Quebec City பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.

ஞாயிற்றுக்கிழமை மதியம் 1 மணி நிலவரப்படி 110,000 Hydro-Québec வாடிக்கையாளர்கள் மின்சாரம் இல்லாமல் உள்ளனர்.

பலத்த பனிப்பொழிவு காரணமாக மரக்கிளைகள் முறிவதாகவும், அவை மின்கம்பிகளை தாக்குவதாகவும் Hydro-Québec பேச்சாளர் தெரிவித்தார்.

100 க்கும் மேற்பட்ட தொழில்நுட்பக் குழுவினர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முடிந்தவரை விரைவாக மின்சாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

மாகாணம் முழுவதும் பல பகுதிகளில் பனிப்பொழிவு எச்சரிக்கை தொடர்ந்து அமுலில் உள்ளது.

Related posts

தொழில் – வாழ்க்கை சமநிலைக்கு உலகின் சிறந்த நகரங்களில் ஒன்றாக மூன்று கனேடிய நகரங்கள் தெரிவு

Lankathas Pathmanathan

Toronto நகர முதல்வர் பதவிக்கு போட்டியிடும் 18 வயது இளைஞர்

13 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் visa இல்லாமல் கனடாவிற்கு வருகை தரலாம்

Lankathas Pathmanathan

Leave a Comment