அடுத்த பொது தேர்தலில் Conservative கட்சிக்காக போட்டியிடும் எண்ணத்தை முன்னாள் Toronto நகரசபை உறுப்பினர் வெளிப்படுத்தினார்.
முன்னாள் Toronto நகரசபை உறுப்பினர் Karen Stintz, அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிடுவேன் என நம்பிக்கை தெரிவித்தார்.
Toronto போக்குவரத்து சபையின் முன்னாள் தலைவரான இவர் முதன் முதலில் 2003 இல் Eglinton-Lawrence தொகுதியில் நகரசபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Toronto நகர முதல்வர் பதவிக்கான முயற்சி தோல்வி அடைந்ததை அடுத்து 2014 இல் அரசியலில் இருந்து அவர் விலகினார்.
Eglinton-Lawrence தொகுதியில் Conservative கட்சிக்காக அடுத்த தேர்தலில் போட்டியிடுவேன் என Karen Stintz உறுதிப்படுத்தினார்.
இந்த தொகுதியை தற்போது Liberal நாடாளுமன்ற உறுப்பினர் Marco Mendicino பிரதிநிதித்துவப்படுத்துகின்றார்.