September 11, 2024
தேசியம்
செய்திகள்

கனடிய தமிழர் பேரவை அலுவலகம் மீது தாக்குதல்!

கனடிய தமிழர் பேரவையின் (Canadian Tamil Congress – CTC) அலுவலகம் மீது தாக்குதல் ஒன்று நிகழ்த்தப்பட்டுள்ளது.

கனடிய தமிழர் பேரவையின் அலுவலகம் சனிக்கிழமை (27) அதிகாலை இனந்தெரியாத நபர்களால் உடைக்கப்பட்டு தீ வைக்கப்பட்டது.

கனடிய தமிழர் பேரவை ஒரு அறிக்கையில் இந்த தகவலை உறுதிப்படுத்தியது

 

இந்த கண்டிக்கத்தக்க செயல் வெறுப்பால் தூண்டப்படுவதாக CTC தெரிவிக்கிறது.

இந்த வெறுப்புக்கு எதிராக சமூக ஒற்றுமையை அந்த அறிக்கையில் CTC வலியுறுத்துகிறது.

இந்த சம்பவம் குறித்து காவல் துறையில் முறையிடப்பட்டுள்ளதாக CTC தெரிவிக்கிறது.

காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருவதாகவும், குற்றவாளிகள் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவது உறுதி செய்யப்படும் எனவும் கூறப்படுகிறது.

 

Related posts

Quebecகில் மீண்டும் 5 ஆயிரத்திற்கும் அதிக தொற்றுகள்

Lankathas Pathmanathan

ஹமாஸ் நடத்திய பாலியல் வன்முறைக்கு கனடிய வெளியுறவு அமைச்சர் கண்டனம்

Lankathas Pathmanathan

கனடிய தமிழர் பேரவையின் நகர்வுகள் கபடத்தனமானவை: கனேடியத் தமிழர் கூட்டு கண்டனம்

Lankathas Pathmanathan

Leave a Comment