தேசியம்
செய்திகள்

காணாமல் போன நகர சபை உறுப்பினரை தேடும் பணி தொடர்கிறது

காணாமல் போன நகர சபை உறுப்பினரை தேடும் பணியில் Sudbury  காவல்துறையினர் தொடர்ந்தும் ஈடுபட்டுள்ளனர்.

இரண்டாவது தொகுதியின் நகர சபை உறுப்பினர் Michael Vagnini காணாமல் போயுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது.

இவர் கடந்த சனிக்கிழமை (27) இரவு 11 மணி முதல் காணாமல் போயுள்ளதாக அவரது குடும்பத்தினர் காவல்துறையில் புகார் அளித்தனர்.

திங்கட்கிழமை (29) மாலை வரை அவர் கண்டுபிடிக்கப்படவில்லை என Sudbury  காவல்துறையினர் தெரிவித்தனர்.

அவரது நலனில் அக்கறை கொண்டுள்ளதாகவும் காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.

Sudbury பெரும்பாகத்தில் உள்ள அனைத்து குடியிருப்பாளர்கள், வணிக உரிமையாளர்களை இந்த தேடுதலுக்கு உதவுமாறு காவல்துறையினர் கோரியுள்ளனர்.

Related posts

கனடாவில் விரைவில் தேர்தலா?

Gaya Raja

Toronto பல்கலைக்கழக Scarborough வளாக தமிழ் ஆய்வுத் தலைவர் நியமனம்

Lankathas Pathmanathan

B.C. மாகாணத்தின் Kelowna நகரில் அவசர நிலை

Lankathas Pathmanathan

Leave a Comment