234 கனேடியர்கள், நிரந்தர குடியிருப்பாளர்கள், குடும்ப உறுப்பினர்கள் காசாவை விட்டு வெளியேறியுள்ளதாக கனடிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை (12) காசாவில் இருந்து இவர்கள் எகிப்துக்கு சென்றுள்ளதாக கனடிய அரசாங்கம் உறுதிப்படுத்தியது.
இரண்டு நாள் மூடப்பட்டிருந்த Rafah பாதை மீண்டும் திறக்கப்பட்டு, வெளிநாட்டுப் பிரஜைகள் போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசத்தை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்ட நிலையில் இந்த அறிவித்தல் வெளியானது.
ஆனாலும் காசாவை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்ட கனடாவுடன் தொடர்புள்ள அனைவரும் எல்லையைத் தாண்டவில்லை என கூறப்படுகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை (10), 266 கனேடியர்கள், நிரந்தர குடியிருப்பாளர்கள், அவர்களது குடும்ப உறுப்பினர்கள் காசாவை விட்டு வெளியேறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.