தேசியம்
செய்திகள்

1,600 கனடியர்கள் இஸ்ரேலை விட்டு வெளியேறினர்!

1,600 கனடியர்கள், நிரந்தர குடியிருப்பாளர்கள் மற்றும் தகுதியான குடும்ப உறுப்பினர்கள், வெளிநாட்டினர் இஸ்ரேலை விட்டு வெளியேற உதவியுள்ளதாக கனடிய வெளிவிவகார அமைச்சு கூறுகிறது.

காசா மற்றும் West Bank பகுதியில் 452 கனேடியர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கனடிய வெளிவிவகார அமைச்சு சனிக்கிழமை (21) மாலை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

இஸ்ரேலில் 5,900 கனடியர்களும், லெபனானில் 16,481 பேரும்  கனடிய வெளிவிவகார அமைச்சில் பதிவு செய்துள்ளனர்.

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான மோதலில் ஆறு கனேடியர்கள் இறந்தது உறுதி செய்யப்பட்டது.

மேலும் இருவர் தொடர்ந்து காணாமல் போயுள்ளனர்.

Related posts

Toronto Maple Leafs அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளர் நியமனம்

Lankathas Pathmanathan

25 சதவீதம் உயர்ந்தது கனடாவின் வீட்டின் விலை – அதிக விலை அதிகரிப்பை கொண்ட பகுதி என்ன தெரியுமா?

Gaya Raja

முதற்குடியினரின் வத்திக்கானுக்கான பயணம் ஒத்தி வைப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment