தேசியம்
செய்திகள்

சூடானில் இருந்து கனடியர்கள் பாதுகாப்பாக வெளியேறும் சந்தர்ப்பம் குறைகிறது

சூடானில் இருந்து கனடியர்கள் பாதுகாப்பாக வெளியேறும் சந்தர்ப்பம் குறைந்து வருவதாக கனேடிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கனேடிய கூட்டு நடவடிக்கைக் கட்டளைத் தளபதி வெள்ளிக்கிழமை (28) இந்த தகவலை வெளியிட்டார்.

வெள்ளி காலை சூடானிலிருந்து பயணித்த துருக்கி விமானம் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

இதில் துருக்கி பணியாளர் ஒருவர் காயமடைந்ததாக நம்பப்படுகிறது.

இந்த நிலையில் வெள்ளியன்று அங்கிருந்து பயணிக்க இருந்த ஒரு கனடிய விமான பயணம் இரத்து செய்யப்பட்டது.

அதேவேளை இயந்திரக் கோளாறு காரணமாக அங்கிருந்து பயணிக்க இருந்த இரண்டாவது கனடிய விமான பயணம் இரத்து செய்யப்பட்டது.

சூடானில் இருந்து வெளியேற உதவி கோரிய கனடியர்களை அழைத்து வருவதற்கு போதுமான விமானங்கள் அடுத்த சில தினங்களில் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுமார் 300 கனேடியர்கள் ஏற்கனவே சூடானில் இருந்து பாதுகாப்பான மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

Related posts

“வருத்தத்தக்க தீமை” – வதிவிட பாடசாலைகளில் கத்தோலிக்க திருச்சபை ஆற்றிய பங்கிற்கு போப் பிரான்சிஸ் மன்னிப்பு கோரினார் !

Lankathas Pathmanathan

Mexico துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட இரண்டு கனேடியர்களுக்கு குற்றவியல் தொடர்புகள் இருந்தன

Lankathas Pathmanathan

கனடாவிற்கு பயண அறிவுறுத்தல் விடுத்த இந்தியா!

Lankathas Pathmanathan

Leave a Comment