வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் புதன்கிழமை (26) நாடாளுமன்றத்தின் முன்பாக பேரணி ஒன்றை முன்னெடுத்தனர்.
கனடிய பொதுச் சேவை ஊழியர் சங்கத்தின் வேலை நிறுத்தம் புதனன்று எட்டாவது நாளாக தொடர்கிறது.
கடந்த ஏழு நாட்களாக Ottawa, Gatineau பகுதிகளில் பல இடங்களில் மறியல் போராட்டத்தில் பொதுச் சேவை ஊழியர் சங்கத்தின் உறுப்பினர்கள் ஈடுபட்டனர்.
புதன்கிழமை அவர்கள் தமது போராட்ட களமாக நாடாளுமன்றத்தை தெரிவு செய்திருந்தனர்.