தேசியம்
செய்திகள்

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை விசாரணையில் தமிழருக்கு 9 வருட தண்டனை

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை விசாரணையில் Torontoவை சேர்ந்த தமிழருக்கு 9 வருடத்திற்கு அதிகமான தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

ரமணன் பத்மநாதன் என்ற தமிழர் இந்த குற்றச் சாட்டில் 9 வருடம், 7 மாதம் 20 நாட்கள் தண்டனை பெற்றுள்ளார்.

12 முதல் 15 வயதுக்குட்பட்ட 8 பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான 39 பாலியல் குற்றங்களில் தன் மீதான குற்றச்சாட்டை ரமணன் பத்மநாதன் கடந்த வருடம் October மாதம் 26ஆம் திகதி ஏற்றுக் கொண்டார்.

இந்த குற்றங்கள் April 1 2019 முதல் February 28, 2021 வரையிலான பல்வேறு காலகட்டங்களில் நிகழ்ந்துள்ளன.

நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், பாதிக்கப்பட்டவர்களிடமும் சமூகத்திடமும் குற்றம் சாட்டப்பட்ட ரமணன் பத்மநாதன் தனது குற்றங்களுக்கு வருத்தமும் மன்னிப்பு கோரியுள்ளார்.

Related posts

முறையான குடியேற்ற நடைமுறை அவசியம்: பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan

பண மோசடி விசாரணைக் குழுவினால் கனடாவில் குற்றச் சாட்டப்பட்டுள்ள தமிழர்

Lankathas Pathmanathan

Sudburyயில் சுரங்கப் பாதையில் சிக்கிய அனைவரும் மீட்கப்பட்டனர்!

Gaya Raja

Leave a Comment