தேசியம்
செய்திகள்

பள்ளிவாசலில் வழிபாட்டாளர்களை வாகனத்தால் தாக்க முனைந்தவர் கைது

பள்ளிவாசல் ஒன்றில் வழிபாட்டாளர்களை தனது வாகனத்தால் தாக்க முனைந்த ஒருவர் மீது குற்றச் சாட்டு பதிவானது.

Ontario மாகாணத்தின் Markham நகரில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.

இந்த சம்பவத்தில் Toronto வாசியான 28 வயதான சரன் கருணாகரன் கைது செய்யப்பட்டதாக York பிராந்திய காவல்துறையினர் தெரிவித்தனர்.

சந்தேகத்திற்கிடமான வெறுப்புணர்வை தூண்டும் சம்பவத்தின் பின்னர் இவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இவர் Markham நகரில் Denison & Middlefield சந்திப்பில் உள்ள மசூதியில் வழிபாடு செய்பவர்கள் நோக்கி வாகனங்களை செலுத்தியதாகவும், அச்சுறுத்தல் வார்த்தைகளை தெரிவித்ததாகவும், இன அவதூறுகளை உள்ளடக்கிய கருத்துக்களை தெரிவித்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

கடந்த வியாழக்கிழமை நிகழ்ந்த இந்த சம்பவத்தில் சந்தேக நபரை காவல்துறையினர் வெள்ளிக்கிழமை நள்ளிரவின் பின்னர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர் மீது மூன்று குற்றச் சாட்டுகள் பதிவாகியுள்ளன.

அவர் மீண்டும் Newmarket நீதிமன்றத்தில் எதிர்வரும் 11 ஆம் திகதி முன்னிறுத்தப்படுவார்.

இவர் மீதான குற்றச் சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை.

இந்த தாக்குதல் சம்பவம் குறித்து “ஆழ்ந்த மனவேதனை அடைந்ததாக” அந்த தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரும் மத்திய வர்த்தக அமைச்சருமான Mary Ng தெரிவித்தார்.

அமைச்சர் Ahmed Hussen இந்த தாக்குதல் சம்பவம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

Related posts

ஜெருசலேம் குண்டுவெடிப்பில் கனடிய இளைஞன் பலி

Lankathas Pathmanathan

Scarboroughவில் புதன்கிழமை தமிழர்களுக்கான சிறப்பு COVID தடுப்பூசி வழங்கும் திட்டம்

Gaya Raja

மாகாண விவகாரங்களில் மத்திய அரசின் தலையீடு மறுக்கப்படுகிறது

Lankathas Pathmanathan

Leave a Comment