Scarboroughவில் அமையவுள்ள தமிழ் சமூக மைய திட்ட நிலவர இணைய மூல ஆலோசனை April மாதம் 5ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதிகரித்த கட்டுமான வரவு செலவுத் திட்டத்துடன், தமிழ் சமூக மையத்தின் திட்டத்தை எவ்வாறு முன்னோக்கி நகர்த்துவது என்பதைத் தீர்மானிக்க இணைய மூலம் கலந்தாய்வு April மாதம் 5ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இந்த இணைய மூல ஆலோசனை படிவத்தை நிரப்ப ஐந்து நிமிடங்கள் ஒதுக்குமாறு தமிழ் சமூக மையத்தின் இயக்குநர் குழு பொது மக்களை கோரியுள்ளது.
தவிரவும் தமிழ் சமூக மையத்தின் திட்டத்தை எவ்வாறு முன்னோக்கி நகர்த்துவது என்பது குறித்த பொதுக் கூட்டம் ஒன்றும் ஏற்பாடாகியுள்ளது.
April மாதம் 1ம் திகதி, சனிக்கிழமை மாலை 3 மணிக்கு, Scarborough Civic Centreரில் இந்த பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.