தேசியம்
செய்திகள்

Ontarioவில் மீண்டும் 30 சென்ரி மீட்டர் பனிப்பொழிவு?

சக்தி வாய்ந்த குளிர்காலப் புயல் ஒன்று வெள்ளிக்கிழமை (17) Ontarioவை தாக்கும் என எச்சரிக்கப்படுகிறது.

வெள்ளிக்கிழமை (17) முதல் சனிக்கிழமை (18) வரை இந்த குளிர்காலப் புயல் Ontarioவை தாக்கலாம் என எச்சரிக்கப்படுகிறது

இந்த காலப்பகுதியில் பலத்த காற்றுடன் மழை, கடுமையான பனி பொழிவு ஆகியன எதிர்பார்க்கப்படுகின்றன.

வடக்கு Ontarioவின் சில பகுதிகளில் வார இறுதியில் 30 சென்ரி மீட்டர் வரை பனிப்பொழிவு எதிர்வு கூறப்படுகிறது.

வியாழக்கிழமை (16) முதல் வடக்கு, மத்திய Ontarioவின் சில பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு தாக்க ஆரம்பிக்கும் என எச்சரிக்கப்படுகிறது.

இது வெள்ளிக்கிழமை (17) தீவிரம் அடைந்து சனிக்கிழமை )18) வரை தொடரும் என எதிர்வு கூறப்படுகிறது.

இதன் காரணமாக Ontarioவின் சில பிராந்தியங்களுக்கு சிறப்பு வானிலை அறிக்கைகள் நடைமுறையில் உள்ளன.

தெற்கு Ontarioவை இந்த குளிர்காலப் புயல் பெரிதும் பாதிக்காது என கூறப்படுகிறது.

Related posts

மேலும் கட்டுப்பாடுகளை அறிவித்த Québec

Lankathas Pathmanathan

தெற்கு Ontarioவில் 20 சென்டி மீட்டர் வரை பனிப்பொழிவு

Lankathas Pathmanathan

அமெரிக்க Open அரையிறுதிக்கு முன்னேறிய கனேடிய tennis வீராங்கனை!

Gaya Raja

Leave a Comment