தேசியம்
செய்திகள்

Ontarioவின் மூன்றாம் கட்ட மீள்திறப்புக்கள் ஆரம்பம்

Ontarioவின் மூன்றாம் கட்ட மீள்திறப்புக்கள் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகின.

இதன் மூலம் திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், மிருகக்காட்சி சாலைகள், அருங்காட்சியகங்கள் உணவகங்கள் ஆகியன மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

COVID தடுப்பூசி பாதுகாப்பு மற்றும் பிற பொது சுகாதார குறிகாட்டிகளில் நேர்மறையான போக்குகளினால் திட்டமிடப்பட்டதை விட சில நாட்களுக்கு முன்னதாக மூன்றாம் கட்ட மீள்திறப்புக்கள் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகின.

வெள்ளிக்கிழமை முதல் வெளிப்புறங்களில் 100 பேரும், உள்ளகங்களில் 25 பேரும் ஒன்றுகூட முடியும். உணவகங்களின் உள்ளகத்தில் உணவருந்தல், எந்தவித கொள்ளளவு கட்டுப்பாடுகளும் இன்றி மீண்டும் ஆரம்பித்தன.

திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், மிருகக்காட்சி சாலைகள், அருங்காட்சியகங்கள் ஆகியன, 50 வீத கொள்ளளவு கட்டுப்பாடுகளுடன் ஆரம்பித்தன.

அதேவேளை வெள்ளிக்கிழமை முதல் அனைத்து விற்பனை நிலையங்களுக்குமான கொள்ளளவு கட்டுப்பாடுகளும் அகற்றப்பட்டுள்ளன.

பொது சுகாதார உத்தரவுகளைப் பின்பற்றி, தடுப்பூசி போட்டுக்கொண்ட Ontario வாசிகளுக்கு முதல்வர் Doug Ford நன்றி தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை காலை வரை 80 சதவீதத்திற்கும் அதிகமான Ontario வாசிகள் குறைந்தது ஒரு தடுப்பூசியையும், 60 சதவீதத்திற்கும் அதிகமான Ontario வாசிகள் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுள்ளனர்.

Ontarioவில் வெள்ளிக்கிழமை 159 புதிய தொற்றுக்களும் 10 மரணங்களும் பதிவாகின.

Related posts

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் May மாதம் 15ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)

thesiyam

Quebecகில் ஒவ்வொருவருக்கும் $500 கொடுப்பனவு

Lankathas Pathmanathan

கடுமையான வெப்ப நிலை கொண்ட கோடை காலம்

Leave a Comment