December 12, 2024
தேசியம்
செய்திகள்

துருக்கியில் நிலநடுக்க இடிபாடுகளில் இருந்து கனடிய பெண்ணின் உடல் கண்டெடுப்பு

துருக்கியில் நிலநடுக்கத்தின் போது இடிந்து விழுந்த கட்டிடத்தில் இருந்து கனடிய பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

கனடாவில் இருந்து துருக்கி சென்றிருந்த கனேடியப் பெண்ணொருவரின் சடலம் கட்டிட இடிபாடுகளில் இருந்து கண்டெடுக்கப்பட்டது.

சடலமாக மீட்கப்பட்டவர் 33 வயதான Samar Zora என அவரது சகோதரியினால் அடையாளம் காணப்பட்டார்.

இவர் தனது சமானுடவியலில் முனைவர் பட்ட ஆய்வுக்காக துருக்கியின் Antakya நகரத்திற்குச் சென்றிருந்தார் எனவும் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

கனடியர் ஒருவர் நிலநடுக்கத்தில் பலியானதை கனடிய வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியது.

February மாதம் 6ஆம் திகதி துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பல்லாயிரக் கணக்கானோர் பலியாகினர்.

Related posts

Barrhaven நகர படுகொலையில் 6 பேர் பலி

Lankathas Pathmanathan

இனப்படுகொலை குறித்த தீர்மானம் கனடிய நாடாளுமன்றத்தில் நிறைவேறியது

Lankathas Pathmanathan

Maple Leafs அணித் தலைவராக பெயரிடப்பட்ட Auston Matthews

Lankathas Pathmanathan

Leave a Comment