Toronto நகரமும் Peel பிராந்தியமும் தற்போது அமுலில் உள்ள பூட்டுதல் நடவடிக்கையை குறைந்தது அடுத்த மாதம் 9ஆம் திகதி வரை நீட்டிக்க பரிந்துரைத்துள்ளன.
இது குறித்த கோரிக்கை Ontario மாகாண அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்டுள்ளது.
Toronto நகரை குறைந்தது மேலும் இரண்டு வாரங்கள் மூடி வைக்குமாறு Ontario மாகாணத்தை Toronto நகர முதல்வர் கோரியுள்ளார். இதே கோரிக்கையை Peel பிராந்திய தலைமை சுகாதாரா அதிகாரியும் Ontario மாகாண அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளார். Toronto, Peel பிராந்தியத்தின் உயர் மருத்துவர்களின் பரிந்துரைக்கு அமைவாக இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
COVID தொற்றின் மூன்றாவது அலையைத் தவிர்ப்பதற்கு எங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும் என இன்று (புதன்) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் Toroto நகர முதல்வர் Tory கூறினார். இந்த நிலையில் மீளத் திறக்கும் திட்டங்களை மெதுவாக நடைமுறைப்படுத்த வேண்டும் என வைத்தியர் Eileen de Villa கூறினார்
இந்த வாரம் மீண்டும் பாடசாலைகள் திறக்கப்பட்டிருந்தாலும், வீட்டில் தங்கியிருப்பதற்கான உத்தரவு Torontoவிலும் Peel பிராந்தியத்திலும் தொடர்ந்தும் நடைமுறையில் உள்ளது. இந்த இரண்டு பகுதிகளுக்கான அவசர கால உத்தரவு குறைந்தது இந்த மாதம் 22ஆம் திகதி வரை தொடர உள்ளது குறிப்பிடத்தக்கது.