தேசியம்
செய்திகள்

கனடாவின் பெரும்பாலான பகுதிக்கும் கடுமையான குளிர் எச்சரிக்கை

Toronto பெரும்பாகம் உட்பட நாட்டின் பெரும் பகுதிக்கு கடுமையான குளிர் எச்சரிக்கை வெளியிடப்பட்டது.

சுற்றுச்சூழல் கனடா இந்த எச்சரிக்கையை வெளியிட்டது.

குறிப்பாக Toronto உட்பட Ontarioவின் பெரும்பாலான பகுதிகளுக்கு குளிர் எச்சரிக்கை வெளியிடப்பட்டது.

வியாழன் (02) இரவும், வெள்ளி (03) இரவும் Ontarioவின் பெரும்பாலான பகுதிகளில் குளிர்நிலை -30 பாகை செல்சியஸ் வரை உணரப்படும் என எதிர்வு கூறப்படுகிறது.

கிழக்கு கனடாவின் பெரும்பகுதி முழுவதும் கடுமையான குளிர் நிலை உணரப்படுகிறது.

வெள்ளிக்கிழமை (03) முதல் Quebec, Atlantic கனடாவின் பெரும்பகுதியிலும் கடுமையான குளிர் நிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது .

Ottawaவில் -30 பாகை செல்சியஸ், Montrealலில் -34 பாகை செல்சியஸ் Quebec Cityயில் பாகை செல்சியஸ் என வெள்ளி இரவு குளிர் நிலை உணரப்படும்.

January மாதம் நாடு முழுவதும் உணரப்பட்ட மிதமான காலநிலை இந்த மாதம் மாற்றமடையும் என ஏற்கனவே எச்சரிக்கப்பட்டது.

Related posts

லித்தியம் சுரங்கத்திலிருந்து வெளியேற சீன நிறுவனங்களுக்கு கனடா உத்தரவு

Lankathas Pathmanathan

பணவீக்க விகிதம் June மாதத்தில் 8.1 சதவீதமாக பதிவானது

Albertaவில் மீண்டும் அறிமுகமாகும் கட்டுப்பாடுகள்!

Gaya Raja

Leave a Comment