December 12, 2024
தேசியம்
கட்டுரைகள்

பாகம் 3 – 2023 இல் கனடாவில் நடைமுறைக்கு வரும் சில புதிய சட்டங்களும் விதிகளும்

2023 இல் கனடாவில் நடைமுறைக்கு வரும் சில புதிய சட்டங்களும் விதிகளும்

சில மாகாணங்களில் குறைந்தபட்ச ஊதிய உயர்வு முதல் (minimum wage increases), வெளிநாட்டிலிருந்து சொத்து வாங்குவோர் மீது கனடா விதித்துள்ள தடை வரை (ban on foreign property buyers), 2023ஆம் ஆண்டில் பல புதிய விதிமுறைகளும் சட்டங்களும் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.

2023 இல் நடைமுறைக்கு வரும் மாற்றங்களில் கனடியத் தொழிலாளர்களுக்கு அதிக ஊதியக் கழிவுகள் (higher payroll deductions), மூன்று Atlantic மாகாணங்களில் மத்திய அரசின் carbon விலை நிர்ணயம், Ontario மருந்தாளுநர்களுக்கு (pharmacists) புதிய மருந்து பரிந்துரைக்கும் அதிகாரங்கள் ஆகியவை அடங்கும்.

இவை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில புதிய சட்டங்களும் விதிகளும்:

நாடு முழுவதும்

2019 ஆம் ஆண்டிற்கு பின்னர் வருடாந்த TFSA அதிகரிப்பு – First annual TFSA limit increase since 2019

உங்கள் வரியில்லா சேமிப்புக் கணக்கில் (Tax-Free Savings Account – TFSA) பங்களிக்க நீங்கள் திட்டமிட்டிருந்தாலோ – அல்லது முதல் முறையாக TFSA கணக்கை ஆரம்பித்தாலோ – 2023 ஆம் ஆண்டில் வருடாந்த தொகை (annual limit) $6,500 ஆக இருக்கும். 2019 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட முதல் வரம்பு அதிகரிப்பின் பின்னர், முந்தைய ஆண்டை விட இது $500 அதிகரிப்பாகும்.

நடுவர் மன்ற (jury) கடமைகளை பாதிக்கும் புதிய சட்டங்கள் – New laws affecting jury duty

2023 ஆம் ஆண்டு January நடுப்பகுதியில் இருந்து, நடுவர் மன்ற (jury) கடமைகளை நிறைவேற்றுவதன் விளைவாக மனநல சவால்களை எதிர்கொள்ளும் (mental health challenges) கனடியர்கள் – உதாரணமாக, விசாரணையின் போது குழப்பமான சான்றுகளைப் பார்ப்பது போன்றவை – மனநல நிபுணருடன் தங்கள் நடுவர் மன்ற பணி குறித்து விவாதிக்க அனுமதிக்கப்படுவார்கள். வழமையாக வழக்கு தொடர்பான தகவல்களை விவாதிப்பது பொதுவாக தடைசெய்யப்பட்டுள்ளது. ஆனால் S-206 சட்டமூலம் நிறைவேற்றப்படுவதன் மூலம் தொழில்முறை ஆதரவைப் பெற வேண்டிய நடுவர் மன்ற உறுப்பினர்களுக்கு விலக்களிக்கப்படுகிறது.

கூட்டாட்சி சட்டத்தின் ஒரு தனிப் பகுதி, January 14 முதல் காணொளி சந்திப்பின் (video conferencing) மூலம் நடுவர் மன்ற தெரிவை அனுமதிக்கிறது. மேலும், செயல்முறையை ஒழுங்குபடுத்தும் வகையில், குற்றவியல் நீதி அமைப்பில் ஏனைய மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன.

பார ஊர்திகள் (trucks), பேருந்துகளை இயக்க புதிய விதிகள் – New rules for operating trucks, buses

January1, 2023 நிலவரப்படி, மாகாணங்களுக்கும் பிராந்தியங்களுக்கும் இடையே பயணிக்கும் பார ஊர்திகள், பேருந்துகளில் காகிதப் பதிவுப் புத்தகங்களுக்கு (paper log books) பதிலாக, ஓட்டுநர்கள் சாலையில் எத்தனை மணிநேரம் செலவிடுகிறார்கள் என்பதை  பதிவு செய்யும் மின்னணு சாதனங்கள் (electronic devices) இருக்க வேண்டும்.

 

(தொடரும் …. )

Related posts

Doug Ford, தமிழர் போராட்டம் விற்பனைக்கல்ல!

Lankathas Pathmanathan

கனடாவில் கட்டாய வாக்களிப்பு சாத்தியமா?

Gaya Raja

அங்கீகரிக்கப்பட்ட COVID தடுப்பூசிகள் குறித்து கனேடியர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?

Gaya Raja

Leave a Comment