தேசியம்
செய்திகள்

ஜெருசலேம் குண்டுவெடிப்பில் கனடிய இளைஞன் பலி

ஜெருசலேம் இரட்டை குண்டுவெடிப்பில் கனடியர் ஒருவர் கொல்லப்பட்டார்.

ஜெருசலேமில் பேருந்து தரிப்பிடங்களுக்கு அருகே புதன்கிழமை (23) காலை இரண்டு குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன.

இதில் ஒரு கனேடிய-இஸ்ரேலிய இளைஞன் பலியானதுடன் குறைந்தது 18 பேர் காயமடைந்தனர்.

பலியானவர் 15 வயதான Aryeh Schupak என அடையாளம் காணப்பட்டார்.

இவர் ஒரு கனடிய குடிமகன் என இஸ்ரேலுக்கான கனடிய தூதர் தெரிவித்தார்.

தீவிரவாத தாக்குதலில் கனடிய இளைஞன் உயிரிழந்ததை அறிந்து வருத்தம் அடைவதாக இந்த சம்பவம் குறித்து பிரதமர் Justin Trudeau தெரிவித்தார்.

Related posts

40 சதவீதத்திற்கும் அதிகமான கனேடியர்கள் முழுமையாக தடுப்பூசியை பெற்றுள்ளனர்

Gaya Raja

Ontario சட்டமன்ற சபாநாயகர் கனடாவுக்கான இலங்கை துணைத் தூதர் சந்திப்பு

Lankathas Pathmanathan

கனடாவை வந்தடைவதற்கு ஆபத்தான பயணங்களை முன்னெடுக்க வேண்டாம்: ஹரி ஆனந்தசங்கரி வலியுறுத்தல்

Lankathas Pathmanathan

Leave a Comment