December 12, 2024
தேசியம்
செய்திகள்

Saskatchewan விவசாயி உக்ரைன் சண்டையில் கொல்லப்பட்டார்

Saskatchewan விவசாயி ஒருவர் உக்ரைனில் நடந்த சண்டையில் கொல்லப்பட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

33 வயதான Joseph Hildebrand உக்ரைனில் கொல்லப்பட்டதாக அவரது சகோதரர் தெரிவித்தார்.

அவரது படைப்பிரிவில் உள்ள வேறு சிலரால் குடும்பத்தினருக்கு இந்த தகவல் அறிவிக்கப்பட்டது.

உக்ரைனில் கனேடிய குடிமகன் ஒருவரின் மரணம் குறித்து அறிந்திருப்பதாக அறிவித்த கனடிய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மேலதிக தகவல்களை வழங்கவில்லை.

உள்ளூர் அதிகாரிகளுடனும் குடும்பத்தினருடனும் தொடர்பில் இருப்பதாக ஒரு அறிக்கையில் வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.

ஆப்கானிஸ்தானில் கனேடிய இராணுவத்தில் பணியாற்றிய Hildebrand உக்ரைனுடன் எந்த தொடர்பையும் கொண்டிருக்கவில்லை என குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Related posts

குற்றம் சாட்டப்பட்ட இலங்கை போர்க் குற்றவாளியை உயர் ஸ்தானிகராக நியமிக்க முடியாது: கனடா

Gaya Raja

Januaryயில் சில்லறை விற்பனை அதிகரிப்பு

Lankathas Pathmanathan

Fixed Mortgage விகிதங்கள் தொடர்ந்து அதிகரிப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment