தேசியம்
செய்திகள்

கனடாவின் அரச தலைவராகிறார் மன்னன் சார்லஸ்

எலிசபெத் மகாராணியின் மறைவை ஒட்டி கனடாவில் பல நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படவுள்ளது.

வரவிருக்கும் நாட்கள் அனைத்து கனடியர்களுக்கும் துக்கம் அனுசரிக்கும் காலமாக இருக்கும் என வியாழக்கிழமை (08) பிரதமர் Justin Trudeau கூறினார்.

மகாராணியின் மறைவைக் குறிக்கும் வகையில் நினைவு அஞ்சலி நடத்தப்படும் போது, தேசிய துக்க தினத்துடன் இந்த துக்க காலம் முடிவடையும் எனவும் பிரதமர் தெரிவித்தார்.

இவரது மரணத்திற்குப் பின்னர் கனடாவில், நாடாளுமன்ற, மாகாண சட்டமன்றங்களின் அமர்வுகள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு இடைநிறுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்ற அமர்வுகள் மீண்டும் September 19ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள நிலையில் அமர்வுகள் இடைநிறுத்தப்படும் காலம் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

பிரதமர் Trudeau, ஆளுநர் நாயகம் Mary Simon உட்பட முக்கிய கனடிய பிரதிநிதிகள் மகாராணியின் இறுதி சடங்கிற்காக இங்கிலாந்து செல்வார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது

ராணியின் மரணத்திற்குப் பிறகு, கனடாவின் அரச தலைவராக மன்னன் சார்லஸ் உடனடியாக மாற்றமடைகிறார்.

Related posts

அமெரிக்காவை விட மோசமான கனடாவின் காற்றின் தரம்?

Lankathas Pathmanathan

KHL அணிகளில் உள்ள கனேடிய வீரர்களை அங்கிருந்து வெளியேறுமாறு கனடா வலியுறுத்தல்

Lankathas Pathmanathan

மனித உரிமைகள் ஆணையத்தின் தலைமை ஆணையர் பதவி விலகல்

Lankathas Pathmanathan

Leave a Comment