தேசியம்
செய்திகள்

கனடா வழங்கியுள்ள கடனை உக்ரைன் ஜனாதிபதி வரவேற்றார்

கனடா வழங்கியுள்ள 120 மில்லியன் டொலர் கடனை உக்ரைன் ஜனாதிபதி Volodymyr Zelensky வரவேற்றுள்ளார்.

இந்தக் கடன் இரு நாடுகளுக்கும் இடையிலான சிறப்பு கூட்டாண்மைக்கு மற்றொரு எடுத்துக்காட்டு என அவர் கூறினார்.

Ottawaவில் உள்ள உக்ரேனிய தூதரகம் வெள்ளிக்கிழமை (21) வெளியிட்ட அறிக்கையின் மூலம் ஜனாதிபதியின் இந்த கருத்து வெளியானது.

கனடாவில் இருந்து அதிக ஆதரவைப் பெறுவதில் நம்பிக்கையுடன் உள்ளதாக உக்ரைனின் ஜனாதிபதியின் அறிக்கை குறிக்கிறது

உக்ரைனுக்கு 120 மில்லியன் டொலரை கடனாக வழங்குவதாக கனடா உறுதியளிப்பதாக பிரதமர் Justin Trudeau வெள்ளிக்கிழமை அறிவித்திருந்தார்.

உக்ரைனுக்கும் ரஷ்யாவிற்கும் வெளியே, உலகின் மிகப்பெரிய உக்ரேனிய மக்கள் தொகை கனடாவில் உள்ளது.

சுமார் 1.3 மில்லியன் உக்ரேனியர்கள் 2016 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி கனடாவில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Related posts

Ontarioவில் இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை!

Lankathas Pathmanathan

மற்றுமொரு முன்னாள் வதிவிடப் பாடசாலையில் 182 கல்லறைகள் கண்டுபிடிப்பு!!!

Gaya Raja

கனடாவின் உச்ச நீதிமன்றத்திற்கு வெள்ளையர் அல்லாத முதல் நீதிபதி பரிந்துரை

Gaya Raja

Leave a Comment