தேசியம்
செய்திகள்

தடுப்பூசி போட மறுப்பவர்களுக்கு அபராதம் விதிக்க Quebec முடிவு செய்துள்ளது.

மருத்துவம் அல்லாத காரணங்களுக்காக COVID  தடுப்பூசி போட மறுப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என முதல்வர் François Legault செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.

செவ்வாய் (11) பிற்பகல் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் முதல்வர் இதனைத் தெரிவித்தார்.

இந்த நடவடிக்கையை நடைமுறைப்படுத்துவது குறித்து நிதியமைச்சருடனும் மாகாண சட்ட ஆலோசகர்களுடன் மாகாணம் ஆலோசனை நடத்தி வருகிறது.

Quebec மாகாணத்தில் தொற்றின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இந்த அறிவித்தல் வெளியானது.

 

Related posts

கனடிய நாடாளுமன்ற சபாநாயகர் பதவி விலகினார்

Lankathas Pathmanathan

இலங்கையில் மனித உரிமை நிலைமை சீர்குலைந்து செல்வது குறித்து கனடா கவலை

Lankathas Pathmanathan

Ontarioவில் தொடரும் பனிப் புயலின் தாக்கங்கள்

Lankathas Pathmanathan

Leave a Comment