தேசியம்
VIDEO - கனடிய செய்திகள் செய்திகள்

இலங்கையில் மனித உரிமை நிலைமை சீர்குலைந்து செல்வது குறித்து கனடா கவலை

இலங்கையில் மனித உரிமை நிலைமை சீர்குலைந்து செல்வதையிட்டுக் கனடா ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக கனடிய வெளியுறவு அமைச்சர் Marc Garneau தெரிவித்தார்.

இன்று (புதன்) அதிகாலை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடரில் உரையாற்றியபோது  அமைச்சர் Garneau இந்தக் கருத்தை தெரிவித்தார். இலங்கையில், மனித உரிமைப் பாதுகாவலர்களும் குடிசார் சமூக அமைப்புக்களும் அச்சுறுத்தப்படுவது, நினைவுகூர்தல் ஒடுக்கப்படுவது, சிறுபான்மையினரின் உடல்கள் பலவந்தமாகத் தகனம் செய்யப்படுவது, சட்டத்தின் ஆட்சி சீர்குலைந்து செல்வது ஆகியவற்றை உள்ளடக்கிய மனித உரிமை நிலைமை சீர்குலைந்து செல்வதையிட்டுக் கனடா ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக அவர் கூறினார்.

இலங்கையில் புரியப்பட்ட குற்றங்களுக்குப் பொறுப்புக் கூறப்படுதை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பு உறுதி செய்யவேண்டியதன் அவசியத்தை, மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையாளர் அண்மையில் வெளியிட்ட அறிக்கை சுட்டிக் காட்டுவதாகவும் அமைச்சர் Garneau தெரிவித்தார். அதேவேளை பொறுப்புக்கூறல், மீளிணக்கம், அமைதி ஆகியவற்றுக்கு ஆதரவான நடவடிக்கைகளுக்குக் கனடா தொடர்ந்து ஆதரவளிக்கும் எனவும் கனடிய வெளியுறவு அமைச்சர் Marc Garneau இன்றைய தனது உரையில் இலங்கை குறித்து தெரிவித்தார்.

 

Related posts

விமான நிலையங்களில் மீண்டும் ஆரம்பமான விமானப் பயணிகளுக்கான COVID பரிசோதனை

வெளிநாட்டு தலையீடு குறித்த சிறப்பு அறிக்கையாளராக முன்னாள் ஆளுநர் நாயகம் நியமனம்

Lankathas Pathmanathan

நோய் அபாயத்தில் உள்ளவர்கள் booster தடுப்பூசியை  பெற வேண்டும்!

Lankathas Pathmanathan

Leave a Comment