தேசியம்
செய்திகள்

Ontarioவில் கோவிட் காரணமாக பதிவான 10 வயதுக்குட்பட்ட முதலாவது மரணம்!

Ontarioவின் Waterloo பிராந்தியத்தில் 10 வயதுக்குட்பட்ட குழந்தையின் COVID தொடர்பான இறப்பை சுகாதார அதிகாரிகள் வெள்ளிக்கிழமை அறிவித்தனர்.

இந்தக் குழந்தைக்கு ஏற்கனவே அடிப்படை சுகாதார நிலைமைகள் இருந்தன என Waterloo பிராந்தியத்தின் சுகாதார மருத்துவ அதிகாரி கூறினார்.

Ontarioவில் தொற்றின் காரணமாக பதிவான 10 வயதுக்குட்பட்டவர்களின் முதலாவது மரணம் இதுவென சுகாதார அதிகாரிகள் கூறினர்.

ஆனால் தனிநபர் உரிமை பாதுகாப்பு சட்டம் காரணமாக இந்த குழந்தையின் விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.

இது முற்றிலும் மனதை பாதிக்கும் ஒரு மரணம் என முதல்வர் Doug Ford தெரிவித்தார்.

Related posts

400 பில்லியன் டொலர்கள் வரை பற்றாக்குறை அதிகரிக்கலாம் – நிதியமைச்சர் Chrystia Freeland

Lankathas Pathmanathan

காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் போராட்டம் தொடர்கிறது

Lankathas Pathmanathan

அடுத்த வாரம் கனடா 1.9 மில்லியன் தடுப்பூசிகளை பெறும்!

Gaya Raja

Leave a Comment