தேசியம்
செய்திகள்

கனேடிய தமிழர்களுக்கு சமூக மையம் குறித்த முக்கிய அறிவித்தல்!

கனேடிய தமிழர்களுக்கு சமூக மையம் அமைப்பதற்கான சிறப்பு அறிவித்தலொன்று வெள்ளிக்கிழமை காலை வெளியாகவுள்ளது.

தமிழ் சமூக மையம் அமைப்பதற்கான செயற்திட்டம் குறித்த மத்திய, மாகாண, நகர அரசுகளின் சிறப்பு அறிவித்தலாக இந்த அறிவித்தல் அமையவுள்ளது. சமூக மையம் அமைப்பதற்கான முக்கிய உட்கட்டமைப்புத் திட்டம் தொடர்பாக அறிவிக்கும் நிகழ்வாக இது அமையவுள்ளது.

கனேடிய துணைப் பிரதமரும் நிதியமைச்சருமான Chrystia Freeland, Ontario மாகாண முதல்வர் Doug Ford, Toronto நகர முதல்வர் John Tory உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இணைந்து இந்த அறிவித்தலை மேற்கொள்ளவுள்ளனர்.

தவிரவும் தமிழ் பிரதிநிதிகளான நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி, Ontario மாகாண சபை உறுப்பினர்களான விஜய் தணிகாசலம், லோகன் கணபதி ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளனர்.

மேலும் மத்திய அமைச்சர்களான Bill Blair, Mary Ng, மாகாண அமைச்சர்களான Kinga Surma, Raymond Cho நகரசபை உறுப்பினர் Jennifer McKelvie ஆகியோரும் இந்த அறிவித்தலில் இணைந்து கொள்ளவுள்ளனர்.

தமிழ்ச் சமூக மையத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொள்வார்கள்.

வெள்ளிக்கிழமை வெளியாகவுள்ள அறிவித்தல் கனடிய தமிழர்களின் வரலாற்றில் முக்கிய அறிவித்தலாக இருக்கும் என இந்த அறிவித்தலுடன் தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவித்தன.

Related posts

Richmond Hill இந்து ஆலய தமிழ் மரபுத் திங்கள் கொண்டாட்டத்தில் பிரதமர்

Lankathas Pathmanathan

April, May மாதங்களில் $3.9 பில்லியன் பற்றாக்குறை பதிவு

Lankathas Pathmanathan

British Colombia முதல்வருக்கு COVID தொற்று உறுதி

Lankathas Pathmanathan

Leave a Comment