தேசியம்
செய்திகள்

Ontarioவை மீண்டும் திறக்கும் திகதியை முன் நகர்த்துவது குறித்து முதல்வர் பரிசீலனை?

Ontarioவை மீண்டும் திறக்கும் திட்டத்தின் இரண்டாம் படிக்கு இந்த மாதம் 30ஆம் திகதிக்கு நகர்த்துவது குறித்து Doug Ford  பரிசீலித்து வருவதாக தெரியவருகிறது.

Ontarioவின் பொருளாதாரம் மீண்டும் திறக்கப்படுவதற்கான இரண்டாவது கட்டத்தை இரண்டு நாட்களுக்கு முன் நகர்த்துவது குறித்து முதல்வர் Ford ஆலோசித்து வருகிறார். புதன்கிழமை திட்டமிடப்பட்டிருந்த  அமைச்சரவைக் கூட்டத்தின் போது இது குறித்த இறுதி முடிவை எடுக்க இருந்ததாகவும் கூறப்பட்டது.

இதேபோல் மூன்றாவது கட்டத்தையும் முன் நகர்த்துவது குறித்து முதல்வர் ஆலோசித்து வருவதாக தெரியவருகிறது.

Ontarioவின் தலைமை சுகாதார மருத்துவ அதிகாரி வைத்தியர் David Williams, சுகாதார அமைச்சர் Christine Elliott ஆகியோர் தற்போது மாகாணத்தின் தொற்று நிலையை பரிசீலித்து வருவதாக முதல்வர் Ford கூறினார்.

Related posts

கனடியர்கள் தொடர்ந்து முகமூடி அணிய வேண்டும்: தலைமை பொது சுகாதார அதிகாரி

Lankathas Pathmanathan

Ontarioவில் COVID மரணங்கள் 8 ஆயிரத்தை தாண்டியது!!

Gaya Raja

அமெரிக்க-கனடா எல்லையில் நான்கு பேரின் உடல்கள் கண்டுபிடிப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment