தேசியம்
செய்திகள்

முழுமையாக தடுப்பூசி பெற்ற பயணிகளுக்கான கட்டுப்பாடுகளை நீக்கும் கனடா

முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பயணிகளுக்கான கட்டுப்பாடுகளை கனடா இரண்டு வாரங்களில் நீக்குகிறது.

கனடிய மத்திய அரசு திங்கட்கிழமை இந்த அறிவிப்பை வெளியிட்டது. கனடியர்கள், நிரந்தர குடியிருப்பாளர்கள், முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட சில வெளிநாட்டினருக்கான பெரும்பாலான சர்வதேச பயணக் கட்டுப்பாடுகளை July மாத ஆரம்பத்தில் கனடா நீக்குகிறது.

கனடாவின் எல்லை நடவடிக்கைகளை எளிதாக்குவதற்கான முன்னெச்சரிக்கை அணுகுமுறையின் முதல் கட்டம் இதுவாகும் என அமைச்சர்  Dominic LeBlanc திங்கட்கிழமை நடைபெற்ற ஒரு செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

July மாதம் 5ஆம் திகதி இரவு 11:59 மணி முதல், தற்போது உள்ள விதிகளின் கீழ் கனடாவுக்குள் நுழையக்கூடிய பயணிகள்  தனிமைப்படுத்தல் விதிகள் எதையும் எதிர்கொள்ளாமல் கனடாவுக்குள் வரமுடியும்.

Related posts

கனடாவுக்கான பயணத்தை மறுபரிசீலனை செய்யுங்கள்: அமெரிக்கா!

Gaya Raja

January இறுதிக்குள் 140 மில்லியன் விரைவு சோதனைகள் கனடாவை வந்தடையும்

Lankathas Pathmanathan

கனடாவுக்கு 1.5 மில்லியன் தடுப்பூசிகளை அனுப்பவுள்ள அமெரிக்கா

Gaya Raja

Leave a Comment