தேசியம்
செய்திகள்

அடுத்த கல்வி ஆண்டில் கல்விச் சபைகள் இணையவழி கல்வியை வழங்க வேண்டும்: Ontario அரசாங்கம் வலியுறுத்தல்

அடுத்த கல்வி ஆண்டில் Ontario மாகாண கல்விச் சபைகள் இணையவழி கல்வியை வழங்க வேண்டும் என மாகாண அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.

 Ontario மாகாண கல்வி அமைச்சர் Stephen Lecce   செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்தக் கருத்தை தெரிவித்தார். 2021-22ஆம் கல்வி ஆண்டு முழுவதும் இணையவழி கல்வியை ஒரு தெரிவாக மாணவர்களுக்கு கல்விச் சபைகள் வழங்க வேண்டும் என அமைச்சர் கூறினார்.

Durham, Waterloo போன்ற சில கல்விச் சபைகள் அடுத்த ஆண்டில் இணைய வழி கல்விக்கான தெரிவை வழங்கவுள்ளதாக ஏற்கனவே அறிவித்துள்ளது. Toronto கல்விச் சபை எதிர்வரும் கோடை கால வகுப்புகள் அனைத்தும் இணைய வழியாக நடைபெறும் என அறிவித்துள்ளது.

Related posts

மீண்டும் ஆரம்பிக்கும் CNE!

Lankathas Pathmanathan

Conservative கட்சித் தலைவர் பதவிக்கு Poilievre சிறந்த தெரிவு: முன்னாள் பிரதமர் Harper

Lankathas Pathmanathan

Toronto நகர முதல்வர் இடைத் தேர்தலில் 68 வேட்பாளர்கள்

Leave a Comment