September 6, 2026
தேசியம்
செய்திகள்

ஒரு மாதம் தொடரவுள்ள கனடாவின் எல்லை கட்டுப்பாடுகள்!

கனடாவின் எல்லை கடவை கட்டுப்பாடுகள் குறைந்தது ஒரு மாதம் தொடரவுள்ளது.

பொது பாதுகாப்பு அமைச்சர் Bill Blair செவ்வாய்க்கிழமை இந்த அறிவித்தலை விடுத்தார். கனடாவின் சர்வதேச மற்றும் அமெரிக்க  எல்லை கட்டுப்பாடுகள் குறைந்தபட்சம் இன்னும் ஒரு மாதத்திற்கு அமுலில் இருக்கும் என அமைச்சர் கூறினார். இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லையை அத்தியாவசியமற்ற பயணங்களுக்கு மூடி வைக்க இரு நாட்டு அதிகாரிகளும்  ஒப்புக் கொண்டுள்ளதாக அமைச்சர் Blair தெரிவித்தார்.

அமெரிக்கர்கள் இல்லாத சர்வதேச பயணிகளுக்கான கட்டுப்பாடுகளை May மாதம் 21ஆம் திகதி  வரை நீட்டிக்கவும்  கனடா முடிவு செய்துள்ளது. இந்த எல்லை கடவை கட்டுப்பாடுகள் கடந்த வருடம் March மாதம் முதல் கனடாவில் அமுலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

Montreal யூத பாடசாலைகள் மீது துப்பாக்கி பிரயோகம்

Lankathas Pathmanathan

Toronto கல்விச் சபை உறுப்பினர் பதவிக்கு மீண்டும் தமிழர் போட்டி

Lankathas Pathmanathan

உக்ரைன் மீதான  ரஷ்யாவின் தாக்குதலுக்கு கனடிய பிரதமர், வெளியுறவு அமைச்சர் கண்டனம்

Lankathas Pathmanathan

Leave a Comment