தேசியம்
செய்திகள்

தொற்றை எதிர்த்துப் போராட, அமெரிக்காவுடன் கனடா நெருக்கமாக செயல்படுகின்றது: பிரதமர் Trudeau

COVID தொற்றை எதிர்த்துப் போராட, அமெரிக்காவுடன் கனடா மிக நெருக்கமாக செயல்படுவதாக கனடிய பிரதமர் கூறினார்.

தொற்றின் பரவலை எதிர்த்துப் போராடுவதற்கு கனடா புதிய அமெரிக்க நிர்வாகத்துடன் நெருக்கமாகப் பணியாற்றி வருவதாக பிரதமர் Justin Trudeau இன்று (வியாழன்) கூறினார். COVID தடுப்பூசிகளை வழங்குவதில் தற்காலிக இடையூறுகள் எதிர்கொள்ளப்படும் போதிலும் மக்களை இந்தத் தொற்றில் இருந்து காப்பாற்றுவதில் கனடா வெற்றி பெறும் எனவும் பிரதமர் Trudeau நம்பிக்கை தெரிவித்தார்.

தடுப்பூசிகளின் விநியோக தாமதம் குறித்து Liberal அரசாங்கம் ஏற்கனவே அழுத்தங்களை எதிர்கொண்டுள்ள நிலையில் இந்த கருத்தை பிரதமர் Trudeau இன்று வெளியிட்டார். எதிர்வரும் மாதங்களில் பல்லாயிரக் கணக்கான தடுப்பூசிகளை கனடா பெறும் என உறுதியளித்த பிரதமர், தடுப்பூசியைப் பெறவிரும்பும் கனடியர்கள் அனைவரும் September மாதத்திற்குள் தடுப்பூசியைப் பெறுவார்கள் என மீண்டும் வலியுறுத்தினார்.

Related posts

வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கோரிய Sunwing

Lankathas Pathmanathan

சீனாவுக்கு எதிரான கனடாவின் பொருளாதாரத் தடை

Gaya Raja

Pfizer தடுப்பூசியின் சேமிப்பு வெப்பநிலையில் மாற்றங்களை Health கனடா அறிவித்தது

Gaya Raja

Leave a Comment