Uyghur முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பாக சீனாவுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை கனடா விதிக்கிறது.அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றுடன் இணைந்து கனடாவும் இந்த பொருளாதாரத் தடைகளை விதிக்கிறது. சீனாவின் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சீன அதிகாரிகளுக்கு எதிராக திங்கட்கிழமை இந்த பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன.
பொருளாதாரத் தடைகளை அறிவிக்கும் அறிக்கையில், கனேடிய அரசாங்கம், ஒரு மில்லியனுக்கும் அதிகமான Uyghur மற்றும் பிற முஸ்லீம் இன சிறு பான்மையினரு க்கு எதிராக அவர்களின் மதம் மற்றும் இனத்தின் அடிப்படையில் சீன அதிகாரிகள் அரசு தலைமையிலான துஷ்பிரயோகங்களை சுட்டிக்காட்டுகின்றது.
கனடாவின் இந்த நடவடிக்கைகள் சீன பிராந்தியத்தில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்களுடன் எங்கள் கடுமையான அக்கறையை பிரதிபலிக்கின்றன என பிரதமர் Justin Trudeau கூறினார். இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சீனாவில் தன்னிச்சையாக தடுத்து வைக்கப்பட்டுள்ள இரண்டு கனேடியர்கள் எதிர்கொள்ளும் சவால்களுடன் இந்த பொருளாதாரத் தடைகள் தொடர்புபடுத்தப்படவில்லை எனவும் Trudeau கூறினார்.