தேசியம்
செய்திகள்

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் May மாதம் 27ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)

குபெக்கிலும், ஒன்றாரியோவிலும் உள்ள முதியோருக்கான நீண்ட கால பராமரிப்பு நிலையங்களில் உதவி புரிவதற்குக் கனேடிய ஆயுதப் படையினர் கடந்த சில வாரங்களில் சென்றுள்ளார்கள்.

பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோ குபெக்கில் உள்ள நீண்ட காலப் பரமரிப்பு நடவடிக்கையின் தற்போதைய நிலைமை குறித்த அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளதாக இன்று அறிவித்தார். தேவைக்குக் குறைவான பணியாளர்கள் பணியில் இருப்பது உட்படக் கவலையளிக்கும் பல விடயங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், இந்த அறிக்கை குபெக் மாகாணத்துக்கும் வழங்கப்பட்டுள்ளது. ஒன்றாரியோ நிலைமைகள் குறித்த அறிக்கை ஒன்றைக் கனேடிய ஆயுதப்படையினர் நேற்று வெளியிட்டார்கள். முதியோர் வதி விடங்களிலும், நீண்ட கால பராமரிப்பு நிலையங்களிலும் உள்ள நிலைமைகள்; குறித்து முதல்வர்களுடன் நாளை நடத்தும் வாராந்த கலந்துரையாடலில் உரையாடவுள்ளதாகப் பிரதம மந்திரி உறுதி செய்துள்ளார்.

கோவிட் – 19 உலகத் தொற்று நோய் வேளையில் கனேடியர்களுக்கு ஆதரவளிப்பதற்குக் கடந்த வாரங்களில் பல பொருளாதார உதவித் திட்டங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளன. மாணவர்களுக்கும், அண்மையில் பட்டம் பெற்றோருக்கும் எதிர்வரும் சில மாதங்களுக்கு உதவியளிப்பதற்கான 9 பில்லியன் டொலர் திட்டமும் இந்தப் பொருளாதாரத் திட்டத்தில் அடங்குகிறது. தற்போது மாகாணங்களிலும், பிராந்தியங்களிலும் சில பொருளாதார நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பமாகி, பலர் பணிக்குத் திரும்பும் வேளையில், பல வேலை கொள்வோர் பணியாளர்களைப் பணிக்கமர்த்த முற்பட்டுள்ளார்கள். கனேடிய இளையோருக்கான 45,000 வேலை வாய்ப்புகள் Canada.gc.ca இல் உள்ளன.

கனடா முழுவதிலும் மாகாணங்களும், பிராந்தியங்களும் பொருளாதார செயற்பாடுகளை முழுமையாகவோ, பகுதியாகவோ மீள ஆரம்பிக்கும் வேளையில், கனடா அவசர சம்பள மானியம் போன்ற திட்டங்களைப் பயன்படுத்திப் பணியாளர்களை மீண்டும் பணியில் இணைத்துக் கொள்ளுமாறு வேலை கொள்வோர் அனைவரிடமும் பிரதம மந்திரி கோரிக்கை விடுத்துள்ளார்.

Updated Emergency Measures by the Canadian Federal Government on May 27th

In the past few weeks, members of the Canadian Armed Forces (CAF) have gone to lend a hand in long-term care facilities and residences for the elderly in Quebec and Ontario.

Today, the Prime Minister, Justin Trudeau announced that a report has been released on the state of long-term care in Quebec. Several worrying issues, including understaffing has been identified, and the report has been shared with the province of Quebec. Yesterday, CAF releaseda report on conditions in Ontario. The Prime Minister has confirmed that he will beraising the issue of conditions in seniorsresidences and long-term care homes with the premiers during the weekly call scheduled for tomorrow.

Over the weeks to assist Canadians during the COVID-19 pandemic several economic support plans have been put in place. Part of the economic plan includes a $9-billion plan to help students and recent grads get through the next few months. Now, as provinces and territories restart some activities and many people head back to work, many employers are looking to hire. Over 45,000 jobs for Canadian youth can now be accessed at Jobbank.gc.ca.

As provinces and territories across Canada reopen their economies or parts of it, the Prime Minister called on all employers to take advantage of programs such as the Canada Emergency Wage Subsidy and hire back employees.

Related posts

Pierre Poilievre சபையை விட்டு வெளியேற்றம்!

Lankathas Pathmanathan

Hydro வெடிப்பின் காரணமாக இரண்டு தொழிலாளர்கள் காயம்

Lankathas Pathmanathan

COVID தென்னாப்பிரிக்க திரிபின் முதலாவது தொற்றாளர் Ontarioவில் அடையாளம் காணப்பட்டார்

Lankathas Pathmanathan

Leave a Comment