கனடாவில் பொருளாதார மந்தநிலையை தவிர்ப்பது கடினம் என தெரிவிக்கப்படுகிறது.
கனடாவின் முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் Stephen Poloz இந்தக் கருத்தை தெரிவித்தார்.
அமெரிக்கா ஜனாதிபதியின் புதிய வரி விதிப்புகளால் கனடா இதுவரை பாதிக்கப்படவில்லை.
ஏனைய நாடுகள் மீது செயல்படுத்தும் அமெரிக்காவின் கடுமையான வரிகளிலிருந்து கனடாவுக்கு விலக்கு அளிக்கப்பட்டாலும், சில கனடிய பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என தெரியவருகிறது.
மேலும் புதன்கிழமை (02) நள்ளிரவு முதல் கனடா உட்பட வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட அனைத்து வாகனங்களுக்கும் 25 சதவீத வரியை விதிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
இந்த வரி கட்டணங்கள் விளைவுகளும் சாத்தியமான எதிர் நடவடிக்கைகளும் பொருளாதார மந்த நிலைக்கான வாய்ப்புகளை அதிகரித்துள்ளது என Stephen Poloz தெரிவித்தார்.