தேசியம்
செய்திகள்

கனடா எல்லையில் அமெரிக்கா பயணக் கட்டுப்பாடுகளை தொடர்ந்து நீடிக்கிறது

கனடா எல்லையில் அமெரிக்கா பயணக் கட்டுப்பாடுகளை மேலும் 30 நாட்களுக்கு நீடித்திருக்கிறது.

கனடா மற்றும் Mexicoவுடனான அதன் நிலம் மற்றும் படகு எல்லைகளில் அத்தியாவசியமற்ற பயணங்களுக்கு கட்டுப்பாடுகளை September 21 வரை அமெரிக்கா நீட்டித்துள்ளது.

Delta மாறுபாடு உட்பட COVID தொற்றுப் பரவலைக் குறைக்கும் நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்பு துறை வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட அமெரிக்கர்கள் August 9 ஆம் திகதி முதல் அத்தியாவசியமற்ற வருகைகளுக்காக கனடாவிற்குள் நுழைய முடிந்தது.

அமெரிக்க எல்லையில் அத்தியாவசியமற்ற பயணத்திற்கான கட்டுப்பாடுகள் March 2020 முதல் நடைமுறையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related posts

குழந்தைகளுக்கு வழங்கக்கூடிய முதலாவது தடுப்பூசி Pfizerரின் ஆகலாம்: கனடாவின் தலைமை மருத்துவ ஆலோசகர்

Gaya Raja

தொற்றின் நெருக்கடி கட்டத்தில் இருந்து கனடா வெளியேறுகிறது: தலைமை பொது சுகாதார அதிகாரி

Lankathas Pathmanathan

ஐயாயிரத்துக்கும் அதிகமான தொற்றுக்கள் ஒரு நாளில் பதிவு

Lankathas Pathmanathan

Leave a Comment

error: Alert: Content is protected !!