தேசியம்
செய்திகள்

மீண்டும் அதிகரிக்கும் தொற்றுக்கள்- வெள்ளிக்கிழமை 2,923 தொற்றுக்கள் பதிவு!!!

நாடளாவிய ரீதியில் COVID தொற்று எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது. வெள்ளிக்கிழமை அதிகமாக 2,923 தொற்றுக்கள் கனடாவில் பதிவாகின.

Albertaவில் வெள்ளிக்கிழமை 749 புதிய தொற்றுக்கள் பதிவானதுடன், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 2 மாத கால உச்சத்தை எட்டியுள்ளது. 221 நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது June 18 க்குப் பின்னரான அதிகபட்ச எண்ணிக்கையும், August ஆரம்பத்திலிருந்து 140 சதவீத அதிகரிப்புமாகும்.

இந்த 221 பேரில் 48 நோயாளிகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். Albertaவில் தகுதியானவர்களில் 77.2 சதவிகிதம் பேர் முதலாவது தடுப்பூசியையும் 68.5 சதவிகிதம் பேர் இரண்டாவது தடுப்பூசியையும் பெற்றுள்ளனர்.

British Colombia மாகாண சுகாதார அதிகாரிகள் வெள்ளிக்கிழமை 663 புதிய தொற்றுக்களை அறிவித்தனர். இது பல வாரங்களில் முதல் முறையாக மாகாணத்தின் ஏழு நாள் சராசரியை குறைக்க காரணமாக அமைந்தது. புதிய தொற்று நோய்களுக்கான British Colombiaவின் சராசரி நேற்று 556லிருந்து இன்று 549 ஆகக் குறைந்துள்ளது.

இந்த நிலையில் குறிவைக்கப்பட்ட தொற்று கட்டுப்பாடுகள் British Colombiaவின் அனைத்து உள்துறைக்கும் இன்று முதல் விரிவுபடுத்தப்பட்டன. இந்த நிலையில் மீளத் திறக்கும் திட்டத்தின் நான்காவது படிக்கு British Colombia September மாத ஆரம்பத்தில் நகர்வது சாத்தியமில்லை என அதிகாரிகள் கூறுகின்றனர்.

Ontarioவிலும் வெள்ளிக்கிழமை 650 புதிய தொற்றுக்களும் பதிவாகியுள்ளன.

Quebecகில் வெள்ளிக்கிழமை 527 புதிய தொற்றுக்கள் பதிவான நிலையில், May மாதத்தின் பின்னர் மிக அதிகமான தொற்றுகளின் அதிகரிப்பை சுகாதார அதிகாரிகள் அறிவித்தனர்.

Saskatchewanனில் 244 புதிய தொற்றுக்கள் வெள்ளிக்கிழமை பதிவு செய்யப்பட்டன.

ஏனைய மாகாணங்களிலும் பிரதேசங்களிலும் தலா 100க்கும் குறைவான தொற்றுக்கள் வெள்ளிக்கிழமை பதிவாகின.

Related posts

வீட்டு வாடகை மீண்டும் அதிகரிப்பு

Lankathas Pathmanathan

June மாத இறுதிக்குள் 24.5 மில்லியன் கனடியர்களுக்கு முழுமையாக தடுப்பூசியை வழங்க முடியும்

Lankathas Pathmanathan

Markham நகரின் ஏழாவது வட்டார வேட்பாளர் ஜுவானிடா நாதனின் தேர்தல் பிரச்சாரம் ஆரம்பம்

Lankathas Pathmanathan

Leave a Comment

error: Alert: Content is protected !!