தேசியம்
கனேடிய தேர்தல் 2021 செய்திகள்

விறுவிறுப்பாக தொடரும் தேர்தல் பிரச்சாரம்!

கனடாவின் மூன்று பிரதான கட்சிகளின் தலைவர்களும் தொடர்ந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு தேர்தல் உறுதிமொழிகளை வழங்கிவருகின்றனர்.

Liberal

கூட்டாட்சி ஊழியர்கள் அனைவருக்கும் 10 நாட்கள் ஊதிய விடுப்பு வழங்குவதாக Liberal கட்சி வெள்ளிக்கிழமை உறுதியளித்தது.

தாம் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் அரசாங்கத்தில் தமது முதல் 100 நாட்களுக்குள் இந்த திட்டம் அறிவிக்கப்படும் என Liberal கட்சி தலைவர் Justin Trudeau அறிவித்துள்ளார்.

அதேவேளை உடனடியாக மாகாணங்கள் மற்றும் பிரதேசங்களின் பிரதிநிதிகளை கூட்டி நாடு முழுவதும் ஊதிய விடுப்பு விதிகளை சட்டமாக்குவது குறித்து விவாதிக்கவும் Liberal கட்சி உறுதியளித்துள்ளது.

Conservative

Conservative கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சுகாதார நிபுணர்களின் மனச்சாட்சி உரிமைகள் குறித்த உறுதிமொழி தொடர்பான அவரது நிலைப்பாடு குறித்த கேள்விகளை Erin O’Toole எதிர்கொண்டார்.

கருக்கலைப்பு அல்லது மருத்துவ உதவி போன்ற சேவைகளைக் கோரும் நோயாளிகளுக்கு இந்த செயல்முறைகளை தாங்களே செய்ய மறுத்தால் மற்றொரு வழங்குநரிடம் பரிந்துரைக்க வேண்டும் என கட்சித் தலைவர் O’Toole பதிலளித்தார்.

NDP

NDP தலைவர் Jagmeet Singh தனது மனைவியுடன் Saskatchewanனில் பெயர்கள் குறிப்பிடப்படாத முன்னாள் வதிவிடப் பாடசாலையில் உயிரிழந்த சிறுவர்களின் கல்லறைகள் அமைந்துள்ள Cowessess First Nation பகுதிக்கு வெள்ளிக்கிழமை விஜயம் மேற்கொண்டார்.

Related posts

Quebecகில் COVID கட்டுப்பாடுகள் சில தளர்வு

Lankathas Pathmanathan

பசுமைக் கட்சியின் தலைவி தலைமை பதவியில் இருந்து விலகல்!

Gaya Raja

முழுமையான கட்டுப்பாட்டுக்குள் Ontario!

Lankathas Pathmanathan

Leave a Comment

error: Alert: Content is protected !!